search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன்"

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து பேசிய பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், குடும்ப கட்சியான காங்கிரசில் பிரியங்காவுக்கு பதவி கொடுத்தது பெரிய விவகாரமல்ல என தெரிவித்துள்ளார். #Congress #PriyankaGandhi #RavishankarPradsad
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.

    கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமலும், கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார். தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார். 

    இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் இன்று வெளியிட்டார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று தெரிவித்தார்.

    தற்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியில் முதல் முறையாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.



    பிரியங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதை அறிந்த ரேபரேலி காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து பேசிய பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், குடும்ப கட்சியான காங்கிரசில் பிரியங்காவுக்கு பதவி கொடுத்தது பெரிய விவகாரமல்ல என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கியது குடும்ப அரசியலின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் பல பாஜக தலைவர்கள் பிரியங்காவுக்கு பதவி வழங்கியது குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.#Congress #PriyankaGandhi #RavishankarPradsad
    பயங்கரவாத தாக்குதல், ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக கொடுத்திருக்கிறது என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். #ParlimentElection #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தேசிய கட்சியின் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் கலந்துகொண்டனர். சுமார் 12 ஆயிரம் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
     
    இந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பேசினர். இதில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது;-



    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் இரு பெரிய சாதனைகளை அனைத்து மக்களுக்கும் விளக்கி சொல்ல வேண்டும்.

    கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக இந்திய மக்கள் அமைதியுடன் வாழ்ந்து வருகின்றனர். அமைதிக்கு ஊறு விளைவிக்கும் பயங்கரவாதிகளின் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. அனைத்து தொண்டர்களையும் பாஜக சமமாக நடத்தி வருகிறது என தெரிவித்தார். #ParlimentElection #NirmalaSitharaman
    மக்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது என்றார். #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன்  இன்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 
     
    நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. அவர்களுக்கு (காங்கிரஸ்) விமானத்தை வாங்க  விருப்பம் கிடையாது, அவர்கள் எதுவும் செய்யவில்லை. 



    வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் வழங்கப்படும். விமானம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வழங்கப்படும். ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

    பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நன்றி தெரிவித்துள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

    கடந்த ஜூன் 20-ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆயிரத்து 258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.



    மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக, பாதுகபபு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் கூறுகையில், தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி.

    மேலும், பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
    வேதாரண்யத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #NirmalaSitharaman
    நாகப்பட்டினம்:

    கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
     
    கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். கஜா புயல் சீரமைப்புக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி கோரினார்.

    இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டர் மூலம் கோடியக்கரை வந்தடைந்தார். அங்கிருந்து வேதாரண்யம் சென்ற அவர், கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

    மேலும், கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களையும் பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். #GajaCyclone #NirmalaSitharaman
    தமிழகத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பார்வையிட உள்ளார். #GajaCyclone #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
     
    கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். கஜா புயல் சீரமைப்புக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி கோரினார்.



    இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பார்வையிட உள்ளார். #GajaCyclone #NirmalaSitharaman
    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசவுள்ளேன் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #KarnatakaFlood #Kumaraswamy #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர் உள்பட பலர் ஈடுபட்டுள்ளனர். முதல் மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.



    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசவுள்ளேன் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி நான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தை சீரமைக்க எம்.பி தொகுதி நிதியாக ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என கோரவுள்ளேன்.

    வெள்ளத்தால் சேதமடைந்துள்ள விரைவில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க உள்ளேன்.

    மேலும், குடகு மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளேன் எனவும் தெரிவித்தார். #KarnatakaFlood #Kumaraswamy #NirmalaSitharaman
    காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய கட்சியா என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். #NirmalaSitharaman #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் டெல்லியில் இஸ்லாமிய மத அறிஞர்கள் குழு ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார். அப்போது அவர்களிடம், காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சி என்று கூறியதாக செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மத ரீதியிலான பிளவுபடுத்தலுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

    ராகுல் காந்தி உள்ளிட்ட சில தலைவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் குறித்த செய்திகளை பார்க்கும் பொழுது, நாட்டின் பழைய கட்சியான காங்கிரஸ் மீண்டும் தனது பழைய கொள்கையான இந்தியாவை பிரித்தாளும் மனப்பான்மைக்கு சென்று விட்டதாக தோற்றம் உருவாகிறது.



    ராகுலின் இந்த பேச்சு காங்கிரசில் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு கட்சிக்கு தலைவர் என்ற முறையில், ராகுல் தெளிவாக பேச வேண்டும். காங்கிரசை முஸ்லிம் கட்சி எனக்கூறியதன் அர்த்தம் என்ன என்பதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும்.

    மதத்தை வைத்து காங்கிரஸ் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறது. 1947 பிரிவினைவாதம், மதக்கலவரம் எனக்கூறி அச்சுறுத்தி வருகிறது. 2019 தேர்தலுக்கு முன் சமுதாய ஒற்றுமைக்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற ஆக்கப்பூர்வமான போட்டியே இருக்க வேண்டும்  என தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #RahulGandhi
    நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #Mansarovar #NirmalaSitharaman
    சென்னை:

    மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவலை கொண்டுள்ளார் என பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்களுக்கு உதவி செய்வதில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை பாதுகாப்பு துறையும் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  #Mansarovar #NirmalaSitharaman
    இங்கிலாந்து பத்திரிகை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படை ஆதாரமற்றது என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். #NirmalaSitharaman #TheSundayTimes #GavinWilliamson
    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை சண்டே டைம்ஸ். இதில் நேற்று வெளியான செய்தியின் சாராம்சம்:

    ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி கேவின் வில்லியம்சனை சந்திக்க நேரம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்தி  வெளியிட்டிருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து பத்திரிகை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படை ஆதாரமற்றது என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இங்கிலாந்து பத்திரிகை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இரு நாடுகள் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. கேவின் வில்லியம்சனை சந்திப்பதற்கான தேதி திட்டமிடப்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார். #NirmalaSitharaman #TheSundayTimes #GavinWilliamson
    ×